சிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்திலேயே அதிக தொகை நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பணிப்பாளர் ஜட்டால் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் 400 தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் வாரம் முதல் ஈரப்பதனுடனான நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபையின் பணிப்பாளர் ஜட்டால் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
ஈரப்பதனுடனான நெல் ஒரு கிலோகிராமுக்கு 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.