கூரையில் ஒதுங்கிய மாடுகள்!

தென்கொரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் மனிதர்கள் மட்டும் பாதுகாப்பை தேடிப் போகவில்லை. ஜெவொல்லா மாநிலத்திலுள்ள குர்யே என்ற ஊரில் பல மாடுகள் வீடுகள் மட்டும் பல்வேறு சிறிய கட்டடங்களின் கூரைகளின் மீது நிற்பதைக் காட்டும் படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

கடந்த வாரயிறுதியின்போது வெள்ளத்தினால் நீர்மட்டம் உயர்ந்தபோது தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்த கிட்டத்தட்ட எட்டு மாடுகள் கூரையின்மீது ஏறி நின்றன.  நீர்மட்டம் பின்னர் இறங்கியபோதும் மாடுகளால் இறங்க முடியவில்லை.

இறுதியில் இந்த மாடுகள் பாரந்தூக்கிகளைக் கொண்டு இறக்கப்பட்டதாக உள்ளூர் ஒருவர் ஜேடிபிசி தொலைக்காட்சி நிறுவனத்திடம் தெரிவித்தார்.  இந்த மாடுகளில் ஒருசிலவற்றுக்கு சளிக்காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

பல வாரங்களாகப் பெய்த இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் முப்பது பேர் வரை இறந்துள்ளனர்.

Related posts