கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரை மற்றும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரை காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பேருவளை முதல் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் 2 முதல் 2.5 மீற்றர் வரை கடலலை உயரக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடற்சார் ஊழியர்களும் மீனவர்களும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts