விபத்தில் ஒரு மாணவி பலி, 11 பேர் காயம்

விபத்தில், மாணவி ஒருவர்  உயிரிழந்துள்ளதுடன் 11 மாணவியர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெயத்தகண்டியலிருந்து அரகலான்வில நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று  மேலதிக வகுப்புக்காக வீதியில் பயணித்த மாணவிகள் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 14 முதல் 16 வயது வரையிலான 11 மாணவிகள் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 4 பேர்  பொலன்னறுவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஏனைய 07 பேர் அரலகன்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த  16 வயது மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அரகலான்வில பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

Related posts