யானையுடன் மோதி ரயில் தடம்புரள்வு ; யானை பலி!

வவுனியா – கனகராயன்குளம், ஆலங்குளம் பகுதியில் இன்று (09) அதிகாலை ரயிலுடன் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளதுடன், புகையிரதமும் தடம்புரண்டுள்ளது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஆலங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாதையில் நின்றிருந்த யானையுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் யானை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், புகையிரதம் பாதையைவிட்டு விலகி தடம்புரண்டது. எனினும் அதிஸ்டவசமாக பயணிகளிற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

Related posts