பிரதமராக இன்று மீண்டும் பதவியேற்கிறார் மஹிந்த ராஜபக்ஷ!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்பு நிகழ்வானது காலை 8.30 மணிக்கு களனி ரஜ மகா விகாரையில் இடம்பெறவுள்ளது.

74 வயதுடைய மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் 2004, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தில் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 527,364 விருப்பு வாக்குகளை பெற்றார்.

Related posts