இலங்கையில் மஞ்சல் தூளில் கலப்படம்!

இலங்கையில் தற்போது மஞ்சல் தூளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மஞ்சலின் தேவை அதிகரித்தமையே இதற்குக் காரணமாக அமைகின்றது.

மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதீதமான ஒரு மருத்துவ குணமுடையதாக விளங்குகின்றது.  கடைகளில் கிடைக்கும் ஒரு சில மஞ்சல் பொடிகளில் ஒரு வகையிலான மா கலக்கப்பட்டிருப்பதாகவும்  அதைப் பயன்படுத்தமுடியாத நிலையும் காணப்படுகின்றது.

இதுசம்பந்தமாக பல புகார்கள்  கிடைத்திருப்பதாக  பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான கலப்படம் செய்து விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts