தெரு நாய்க்கு கார் விற்பனையாளர் பணி!

பிரேஸிலில் எஸ்பிரிட்டோ சேண்டா மாநிலத்தில் உள்ள சொர்ரா எனும் பகுதியில் ‘ஹையுண்டாய் கார் காட்சியறை’ ஒன்று அமைந்துள்ளது. அந்த காட்சியறைக்கு அருகில் சுற்றித் திரிந்த தெருநாயோடு காட்சியறை ஊழியர்களுக்கு நெருங்கிய அன்பு உருவாகியுள்ளது. அவர்களின் செல்லப்பிராணியாக அவர்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அவர்கள் அந்த நாயை தங்கள் குடும்பத்தில் ஒன்றாக நினைத்து, அதை சேர்த்துக் கொண்டு கௌரவ ஊழியர் பணியையும் வழங்கியுள்ளனர். அது மட்டுமன்றி ‘டக்சன் பிரைம்’ எனப் பெயருள்ள அந்த நாய்க்கு பணி அடையாள அட்டையும் வழஙகியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts