திருமலையில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு!

கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றிருக்கின்றது. இது பற்றி தெரியவருவதாவது.

திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரரொருவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தரமுயர்வுக்கான பரீட்சார்த்தப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை நேற்று (7) மாலை மயக்க நிலை ஏற்பட்டதாகவும், அதனையடுத்து கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Related posts