சர்க்கரை நோயின் அறிகுறிகள்!

உலகில் உள்ள கொடிய நோய்களில் புற்று நோய் அடுத்து அதிகமாக பாதிக்கப்படுவது சர்க்கரை நோய்.

சர்க்கரை நோய் எப்படி வருகிறது என்று தெரியுமா?

உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது.
இது என்ன வேலை செய்யும் என்றால் நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பாகவும், கிளைக்கோ ஜென்னாகவும் சேமித்து வைக்கப்படுகிறது.

பல காரணங்களால் கணையதிலிருந்து சுரக்கும் இன்சுலின் அளவு குறையும் பொழுது உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றபடமால் அப்படியே இரத்தத்தில் கலந்து விடுகிறது.

இதனால் சர்க்கரையின் அளவு அதிகரித்து சிறுநீரில் வெளியேறுகிறது, இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

அதிகம் பசி எடுத்தல்.

எப்போதும் களைப்பாக இருப்பது.

எடை குறைதல்.

இரத்த சொந்தத்தில் வேறு எவருக்கும் இருந்தால் வரும்.

மங்கலான பார்வை.

சர்க்கரை நோய் உண்டாக சில காரணங்கள்.

அதிக எடை.

அதிக கொழுப்பு.

இரத்த கொதிப்பு.

கவலை, மன உளைச்சல்.

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம் மற்றும் மருந்தும் வேண்டாம். நாம்
இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான பொருட்கள்.

வர கொத்தமல்லி – அரை கிலோ.

வெந்தயம் – 1/4 கிலோ.

சர்க்கரை நோயின் அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான செய்முறை.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்க்காமல் வரக்கொத்தமல்லியை பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.

அதே கடாயில் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.

இவற்றை இரண்டையும் நன்றாக ஆறவைத்து மிக்சியில் பொடியாக தனி தனியாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின் இரண்டையும் ஒன்று சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

தற்பொழுது இந்த பொடியை எப்படி குடிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் இந்த பொடியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

அது ஒரு டம்ளர் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதனை வடிகட்டி சாப்பிட முக்கால் மணி நேரம் முன்பே இதை குடிக்க வேண்டும்.

இதை மூன்று வேலையும் இதே போன்று குடிக்க வேண்டும்.

இதை நாம் குடித்ததும் வேற எதும் சாப்பிட கூடாது மற்றும் தண்ணீர் தவிர வேறு எதும் குடிக்க கூடாது.

இதை தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

Related posts