பாராளுமன்றத் தேர்தல் 2020 இன் சுருக்கம்!

நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின்  கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையிலான முடிவுகளின் பிரகாரம் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. தேசியப்பட்டியில் 17 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக 145 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அதற்கு அடுத்த படியாக சஜித் பிரேமதாஸ வழி நடாத்திய ஐக்கிய மக்கள் சக்தி 47 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன், 7 தேசியப்பட்டியல் ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.  இலங்கை தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ஒரு தேசியல் பட்டியல் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

எனினும்  இலங்கையில் பழமைவாய்ந்த பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட பெறாமல் பாரிய தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் களம் இறங்கிய மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தரப்புக்கு இரு பாராளுமன்ற ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.  தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹாவில் அவ்வாசனங்கள் அக்கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனைவிட, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இரு ஆசனங்களையும்,  தனித்து போட்டியிட்ட இடங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு ஆசங்களையும் கைப்பற்றியுள்ளன.

இதனைவிட புத்தளத்தில்   முஸ்லிம் தேசிய கூட்டணி  ஒரு ஆசனத்தினை பெற்றுள்ளது. அத்துடன் தேசிய காங்கிரஸ் ஒரு ஆசனத்தினையும், யாழில் தனித்து போட்டியிட்ட  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒரு ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது. இதனைவிட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியனவும் தலா ஒவ்வொரு ஆசனங்கள் வீதம் கைப்பற்றியிருந்தன.

Related posts