உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

கரடியனாறு பொலிஸ் பிரிவு பண்டாரக்கட்டு வயல் பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் வேப்பவெட்டுவானை சேர்ந்த உதயராசா மயூரன் (27) என்பர் பலியானார்.

ஒரு பிள்ளையின் தந்தையான இவர்,  வயலை உழுதுவதற்காக நேற்று மாலை வீட்டிலிருந்து உளவு இயந்திரம் செலுத்தி, பண்டாரக்கட்டு வயலை அண்மிக்கும் போது தடம்புரண்டு தலைப்பகுதி பாதிப்புற்று அதிக குருதி வெளியேறிய நிலையில் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

Related posts