இந்திய விமானம் இரண்டாக உடைந்தது; பலர் பலி!

டுபாயில் இருந்து இந்தியா நோக்கி பயணித்த எயார் இந்திய விமானம் ஒன்று இன்று (07) இரவு 7.30 மணியளவில் கேரளா – கோழிகோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்துள்ளது.

இந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 5 பணியாளர்கள் என 191 பேர் இருந்துள்ளனர்.

தரையிறங்க முற்பட்ட போது ஓடுபாதையில் இருந்து விலகி இடம்பெற்ற இந்த விபத்தின் போது விமானம் இரண்டாக பிளந்துள்ளது.

சம்பவத்தில் இதுவரை விமானி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். ஏனையோரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts