வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் !

பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும், இறுதி தேர்தல் முடிவை இன்று நள்ளிரவு அளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும்  நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலில் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்த 12,885 மத்திய நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 16,263,885 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடித்து தேர்தல் பணிகள் நடைபெற்றன.

நேற்று மாலை 5 மணியளவில் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில், பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்றையதினம் (6)  வாக்கு பெட்டியில் உள்ள வாக்குகள் எண்ணும் நடவடிக்கை வாக்கெண்டும் மத்திய நிலையங்களில் சற்றுநேரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related posts