யாழில் தேர்தல் கூத்தாடிகள்!

அங்கஜன் இராமநாதனின் யாழ் அலுவலகத்தில் இருந்து 3இற்கும் அதிகமான தொலைபேசி இலக்கங்களின் வழியாக மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை தொடர்பு கொண்டு, அங்கஜனிற்குத்தானே வாக்களிக்கப் போகிறீர்கள் என வினவினார்களாம்.

பிரச்சார நடவடிக்கையின் போது, ஒவ்வொரு வீட்டிலும் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்து, தொலைபேசி இலக்கங்களை பெற்ற அங்கஜன் இராமநாதனின் பிரச்சார குழு, அந்த தொலைபேசிகளுக்கு அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டனர்.

இது தவி, நேற்று மாலை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரனின் துண்டுப்பிரசுரங்கள் வடமராட்சியின் சில பகுதிகளில் விநியோகிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் விமர்சனம் தெரிவித்திருந்தனர்.

Related posts