திருநெல்வேலியில் வயோதிபப் பெண் தீயில் கருகிப்பலி!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் வயோதிப பெண் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்  திருநெல்வேலியை சேர்ந்த 67 வயதுடைய  பொண்ணம்பலம் சிவகாமசுந்தரி என்ற தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது வீட்டில் சுகயீனம் உற்று படுக்கையில் இருந்துள்ள வயோதிப பெண் மீதும் தீ பரவியுள்ளது. தீயினை கட்டுப்படுத்த முடியாமல் தின்டாடிய வீட்டுக்காரர் அயலவர்களின் உதவியை கோரியுள்ளனர்.

அயலவர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் நோய் வாய்ப்பட்டிருந்த வயோதிப பெண் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இந்த தீ விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts