அமெரிக்க பகிரங்க தொடரிலிருந்து விலகினார் நடால்!

நடால் செவ்வாயன்று ஸ்பானிஸ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

அந் டுவிட்டர் பதிவில் அவர்,

நீண்ட சிந்தனைக்குப் பின் தான் இந்த ஆண்டு அமெரிக்க பகிரங்க தொடரில் பங்கேற்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன்.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதை நம்மால் இன்னும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை என தன் விலகலுக்கு காரணம் கூறி உள்ளார்.

இதனிடையே மகளிர் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டியும் இத் தொடரிலிருந்து விலகுவதாக முன்னர் அறிவித்திருந்தார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆரம்பமாகி செப்டெம்பர் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related posts