யாழில் 4 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த 4 பேரும் சவுதியிலிருந்து நாடு திரும்பிய நிலையில் யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டவர்கள் என பணிப்பாளர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இதேவேளை தொற்றுக்குள்ளானவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கொவிட் 19 விசேட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். இதே சமயம் வட பகுதியில் பல்வேறு இடங்களிலும் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று ஒருவருக்கும் இல்லை
என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே மக்கள் இது விடயம் தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொதுமக்கள் தங்களது அன்றாட கடமைகளையும் செயற்பாடுபளையும் தொடர்வதுடன் சுகாதார அமைச்சினால் COVID 19 தொற்று தவிர்த்தல் தொடர்பாக வழங்கப்பட்ட சகல அறிவுறுத்தல்களையும் பின்பற்றி நடந்து கொள்ளவும் என பணிப்பாளர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

நேற்று 130 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்.

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 01

போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 03

பொது வைத்தியசாலை கிளிநொச்சி – 01

தனிமைப்படுத்தல் நிலையம் விடத்தல்பளை -125 பேர் ( நால்வருக்கு தொற்று உறுதி)

Related posts