உலகளவில் கொரோனா உயிரிழப்புகள் 07 இலட்சத்தை தாண்டியுள்ளன.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18,708,865 ஆக பதிவாகியுள்ளதோடு, 11,925,746 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் 4,918,420 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 160,290 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேஸிலில் 2,808,076 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு 96,096 பேர் பலியாகியுள்ளனர்.
இதேநேரம், இந்தியாவில் 1,910,681 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், 39,856 பேர் உயிரிழந்துள்ளனர்.