கொரோனாத் தேர்தல்!

புதிய பாராளுமன்றத்தை உருவாக்குவதற்காக இலங்கையில் (ஆகஸ்ட் 05)  இன்று நடைபெறும் தேர்தலானது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆசியாவில் நடைபெறும் முதல் தேர்தலாக நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் சில இடங்களில் குவிக்கப்பட்டிருக்கும்  இராணுவத்தினரால் மக்களிடம் ஓர் அச்ச உணர்வு மேலொங்கியிருக்கின்றது.

வடக்கிலும், கிழக்கிலும் வழமைக்குமாறாக இம்முறைத் தேர்தலில், அதிகளவான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக சில வாக்குச் சாவடிகளை அண்டிய பகுதிகளில் இராணுவச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுக் காணப்படுவதுடன், இராணுவத்தினரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இங்குள்ள மக்கள் ஒருவித அச்சத்துடன் காணப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய அதிக பாதுகாப்பை தவிர்த்து, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய நிலையினை ஏற்படுத்தியிருக்கலாம் என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான வழிகாட்டுதல்களின் கீழ் நடைபெறும் தேர்தலில் இலங்கை புதிய 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்கும்.

மேலும் சிறப்பு என்னவென்றால் மாலை 4 மணியிலிருந்து 5 மணிவரையிலான நேரம் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கானது. இந்நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் வாக்குகளை அளிக்கலாம் என தேர்தல் ஆணையகம் தெரிவித்திருந்தது.

– அற்புதன்-

 

Related posts