ஸ்பெயினின் முன்னாள் மன்னர் நாட்டிலிருந்து வௌியேறத் தீர்மானம்!

ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லஸ் (Juan Carlos), நாட்டை விட்டு வௌியேறுவதற்கு தீர்மானித்துள்ளார்.

ஜுவான் கார்லஸ் மீது கடந்த வாரங்களில் முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுடனான விரைவு ரயில் போக்குவரத்து திட்டத்தில் 100 மில்லியன் டொலர் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து முன்னாள் மன்னர் ஜூவான் கார்லஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஸ்பெயின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் பகிரங்க விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகளை 82 வயதான ஜுவான் கார்லஸ் மறுத்துவந்தார்.

ஏற்கனவே 2014 ஆம் ஆண்டில் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லஸின் மகளான இளவரசி கிறிஸ்டினா மீதும் வரி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்ததுடன் இளவரசி மாத்திரமன்றி அவரது கணவரும் தடுத்துவைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts