வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு!

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2020 நாளை (05) இலங்கையிலுள்ள 23 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

09 மாகாணங்கள் : 23 தேர்தல் மாவட்டங்கள் : 332 பிரதேசசெயலகங்கள் : 14022 கிராமசேவையாளர் பிரிவுகளில் நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் பற்றிப் பார்ப்போம்.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 3652 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்களைச் சேர்ந்த  3800 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர். கொழும்பு , கம்பஹா , களுத்துறை , கண்டி , மாத்தளை, நுவரெலியா , காலி , மாத்தறை , அம்பாந்தோட்டை , யாழ்ப்பாணம் , வன்னி , மட்டக்களப்பு , திகாமடுல்லை , திருகோணமலை , குருணாகல் , புத்தளம் , அநுராதபுரம் , பொலன்னறுவை , பதுளை , மொனராகலை , இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் சார்பில் ஒட்டுமொத்தமாக 7 , 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றர்.

தேர்தல்  காலங்களில் வதந்திகளை பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை உடன் அறிந்துகொள்ள “பொலிகை மண்ணுடன்” இணைந்திருங்கள்.

Related posts