நாளை அனைத்து வங்கிகளும் அரைநாள் விடுமுறை!

இலங்கையில் நாளையதினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வர்த்தக வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வர்த்தக வங்கிகளை நேரத்திற்கு முன்னரே மூடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பு திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

வங்கி கிளைகளைத் திறந்து வைக்கும் நேரங்கள் வங்கி கிளைகளுக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சில வங்கிகள் மற்றும் கிளைகள் திறந்து வைக்கப்படும் நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய நாளைய தினம் வங்கியின் வழமையான செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts