சிரேஷ்ட தேர்தல் அலுவலர்கள் 10 பேர் கடமை நீக்கம்!

நுவரெலியாவில் தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 10 சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் (ஆசிரியர்கள்) கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ​ரோஹன புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரிகள் 10 பேரும் அரசியல்கட்சி கூட்டங்களில் கலந்து​ கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டதால் அவர்களை தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அவர்களுக்கு எதிராக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts