வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்லும் நடவடிக்கை நாளை காலை 8 முதல்!

பொதுத் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்லும் நடவடிக்கை நாளை (04) காலை 8 மணி முதல் இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு தேர்தல் தினத்தில் பிற்பகல் 4 மணி முதல் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts