வாக்குச்சாவடியில் குழப்பங்கள் நடந்தால் நடப்பது என்ன?

வாக்களிப்பு நிலையங்களில் குழப்பங்கள் எதுவும் ஏற்படும் பட்சத்தில் அந்த வாக்களிப்பு நிலையம் மற்றும் பிரதேசத்தின் வாக்களிப்பை இரத்து செய்து மீண்டும் வாக்கெடுப்பை நடாத்த தயங்குவதில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6ம் திகதி 07 மணி அல்லது 08 மணிக்குத் தொடங்கும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்காளர்களின் வாக்களிக்கும் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 விகிதமாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Related posts