யாழில் தேர்தல் முன்னேற்பாடுகளும் பூர்த்தி!

தேர்தலினை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் முன்னேற்பாடுகள் தொடர்பில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதி நிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (03) இடம்பெற்ற போது இதனை தெரிவித்தார். மேலும்,

“இன்றைய தினத்திலிருந்து யாழ்ப்பாண தேர்தல் அலுவலகம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இயங்கவுள்ளது. நாளை (04) காலை 8 மணியிலிருந்து மூன்று பிரிவுகளாக வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த பணியில் பொலிஸார், சுகாதாரப் பிரிவினரின் ஒத்துழைப்போடு பெட்டிகளை இடம்மாற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.” – என்றார்.

Related posts