பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயனத் திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஆறு வாக்களிப்பு நிலையங்களும், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் ஏழு வாக்களிப்பு நிலையங்களும், வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் பதினாறு வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயனத் திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.