சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு க்ரு டிராகன் விண்கலத்துடன் கூடிய, ‘பால்கன் – 9’ ரக ரொக்கெட்டில் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட நாசா விண்வெளி வீரர்களான, பொப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவம் வெற்றிகரமாக இரண்டு மாத பயணத்தை பூர்த்தி செய்து இன்று அதிகாலை பூமியை வந்தடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரு டிராகன் விண்கலத்துடன் கூடிய, ‘பால்கன் – 9’ ரக ரொக்கெட்டை கடந்த மே, 31ம் திகதி புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியிருந்தது.
அதில், பயணித்த நாசா விண்வெளி வீரர்களான, பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்த அடைந்து கடந்த இரண்டு மாதங்களாக அங்கு ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு, க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கிய நிலையில் இன்று அதிகாலை நாசா வீரர்கள், பூமியை வந்தடைந்துள்ளனர்.
புளோரிடா அருகில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில், புயல் உருவாகி இருப்பதால், மெக்சிகோ வளைகுடாவில், விண்கலத்தை, ‘பாராசூட்’ உதவியுடன் இவர்கள் தரை இறக்கப்பட்டுள்ளனர்.