என்றும் மக்களின் நெஞ்சினில் சிவாஜிலிங்கம்!

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழ் மக்களது மனங்களில் என்றுமே இடம்பிடித்திருக்கின்றார். தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைகளை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டிய மகானாகவும் விளங்குகின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தன்னாலான முழு உதவிகளையும் செய்வது மட்டுமன்றி அது சம்பந்தமான அதிகாரிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் துயரிலும் பங்கேற்றார். இவரின் அக்கறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களுக்கு ஏன் இல்லாமல் போனது எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

தேசியத்தலைவரின் தாயை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பிய போதும் அவரை வல்வெட்டித்துறையில் ஒரு வீட்டில் பாதுகாத்த தகவல்களும் இன்றும் மக்களால் பெருமையாகப் பேசப்பட்டு வருகின்றது.

2001ஆம் ஆண்டு  டிசெம்பர்  பாராளுமன்றத் தேர்தலில் சிவாஜிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார். 2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதோபோல் இம்முறையும் தமிழ்த் தேசிய மக்கள் சக்தியில் மீன் சின்னத்தில் போட்டியிடும் சிவாஜிங்கத்திற்கு எமது வாக்கினை அளித்து வெற்றிபெறச் செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம்.

– அற்புதன்-

Related posts