பரப்புரைக் கூட்டத்தில் நேற்று மாலை தாக்குதல்!

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிறீதரனின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது சுயேச்சைக் குழு ஒன்றின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற கூட்டம் நேற்று மாலை அக்கராயன் பொதுச் சந்தைப்பகுதியில் நடைபெற்றுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றிக்கொண்டிருந்த போது சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக்கொண்டிருந்தனர்.

பளையில் நடைபெறும் பரப்புரைக் கூட்டத்துக்காக சிறீதரன் புறப்பட்டுச்சென்ற பின்னர் அந்தக் குழு உள்ளே புகுந்து பரப்புரையில் பங்குபற்றிய மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Related posts