துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் பலி!

பெலியத்த – தம்முல்ல பகுதியில் வீடொன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (02) முற்பகல் 10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெலியத்த – தம்முல்ல வீரகெட்டிய வீதியைச் சேர்ந்த 52 வயதான பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts