யாழ். இருபாலையில் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களிடம் கையளிப்பு!.

யாழ். இருபாலை தெற்கு ஞான வைரவர் கோயிலடி பிரதேச மக்களுக்காக 25 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் நேற்று (31) அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

ஞான வைரவர் கோயிலடி கிராம மக்கள் குடிநீரைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் இந்த மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறித்த பிரதேச சபை உறுப்பினர் ந.கஜேந்திரகுமாரின் முயற்சியினால் சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக் குடிநீர் திட்டம் அமைகப்பட்டது.

Related posts