நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட லங்காபுர மாவட்ட செயலக ஊழியருடன் நெருங்கிய தொடர்பை பேணிய உறவினர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2,815 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானோரில் 2,391 பேர் குணமடைந்துள்ளதோடு 413 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, 48 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில்  கொரோனா  தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

இதே வேளை கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஜூலை 24 ஆம் திகதி வரை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 196 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts