கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டவர்கள்  2,814! 

நேற்றையதினம் (30) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இலங்கையில் 2,078 ஆவது நபராக அடையாளம் காணப்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையான கைதியை அடுத்து, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலும் அதனுடன் தொடர்புபட்டவர்களுமாக இதுவரை 600 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளளனர் என தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (30) கந்தக்காடு சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய குறித்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக,  அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் மாத்திரம் இதுவரை 549 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (31) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,811 இலிருந்து 2,814 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,333 இலிருந்து 2,391 ஆக காணப்படுகின்றது.

நேற்று (30) கட்டாரிலிருந்து வந்த ஒருவர் (1), அமீரகத்திலிருந்து வந்த ஒருவர் (1), துருக்கியிலிருந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் (1) ஆகிய 3 பேரே அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, இன்றையதினம் (30) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, 58 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts