2021 ஆம் ஆண்டுவரை வீட்டில் இருந்து பணியாற்ற கூகுள் ஊழியர்களுக்கு அனுமதி!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 2021 ஜூலை வரை அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்து பணியாற்றும்படி (Work from Home) தனது ஊழியர்களை கூகுள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தி வொசிங்டன் போஸ்ட், தி வொல் ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆகியவை வெளியிட்ட செய்தியில், ஸ்னாப் நிறுவனம் (Snap) தரப்பில் செப்டம்பர் வரை வீட்டில் இருந்து பணியாற்ற அளிக்கப்பட்ட அனுமதி ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும், அமேசன் கார்ப்பரேட் ஊழியர்களும் 2020 முழுவதும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு 2020 முழுவதும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க திட்டமிட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts