பஸ்களில் பொருட்களை விற்பனை செய்வோர் ஆர்ப்பாட்டம்!

பஸ்களில் பொருட்களை விற்பனை செய்வோர் நேற்றையதினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக பஸ்களுக்குள் பொருட்களை விற்பனை செய்வது தடைச் செய்யப்பட்டுள்ளதனால் வருமான பிரச்சினையை அவர்கள் எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை நடமாடும் வியாபாரிகளின் சங்கத்தினரால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts