ஜோர்தானில் ஆர்ப்பாட்டம் நடத்திய இலங்கையர் மீது தாக்குதல்!

ஜோர்தானில் நேற்று போராட்டத்தை நடத்திய இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மீது ஜோர்தானிய பொலிஸார்  கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து கண்ணீர்ப்புகைத் தாக்குதல் பொலிஸாரால் நடத்தப்பட்டது.

உள்ளூர் ஊடகங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களை அந்நாட்டு செய்திகளில் ஒளிபரப்பியது. அவர்களில் பெரும்பாலோர் தப்பி ஓடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இலங்கை அதிகாரிகள்  தங்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 500 இலங்கையர்கள் பங்குபற்றியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோர்தானில் தாங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக வேலையில்லாமல் இருந்ததாக புலம்பெயர் தொழிலாளர்கள் கூறினர்.

Related posts