கடலட்டை தொழிலுக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!!

யாழ். வடமராட்சி பகுதியில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதைத் தடை செய்ய கோரிய வழக்கு 30ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி பகுதியில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதற்கான தடை உத்தரவை கடந்த வருடம் பெற்றிருந்த நிலையில் இவ்வருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடிபடுவதறக்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து மீண்டும் கடந்த 22/07/2020. அன்று நீதிமன்றறில் மீள் தடை உத்தரவை பெறுவதற்க்காக மனுதாரர்கள் கோரியிருந்த நிலையில் அவ்வழக்கிற்கு நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் சமூகமளிக்காத காரணத்தால் இன்றைய தினத்திற்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று (27) நீதிவான் விடுப்பில் சென்றுள்ளமையாலும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் சமூகமளிக்காதமையாலும் மீண்டும் எதிர்வரும் வியாழக்கிழமை (30) வரை வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

Related posts