ஐபோன் 12 அக்டோபரில் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனம் ‘ஐபோன் 12’ கையடக்கத்தொலைபேசியை, அக்டோபர் இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. செப்டெம்பரில் அறிமுகம் ஆக வேண்டியது, ஒரு மாதம் தள்ளிப் போகிறது. இதற்கு முக்கிய காரணம், கொரோனா பரவல் உள்ளிட்டவற்றால் கையடக்கத்தொலைபேசி உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டு வருவது தான்.இதற்கிடையே ‘ஐபோன் 12 5ஜி’  நவம்பரில் அறிமுகம் ஆகும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், ஐபோன் 12, நான்கு வகைகளில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும்; அவை, 5ஜி வலையமைப்புடன் ஒத்து போகும் என்றும் தகவல்கள் வருகின்றன. எது உண்மை என்பது அக்டோபர் வந்தால் தெரிந்துவிடும்.

Related posts