மலேஷிய கடலில் 24 ரோஹிங்யாக்கள் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என அச்சம்!

ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் 24 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என அஞ்சப்படுவதாக மலேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்துக்கு அருகில் மலேஷிய கடற்பரப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அஞ்சப்படுவதாக மலேஷியாவின் கேதாஹ் மாநிலத்தின் கரையோர காவல்படை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

நோர் ஹொஸைன் எனும் 27 வயதான ரோஹிங்யா குடியேற்றவாசி ஒருவர் நீந்திவந்து மலேஷிய கரையோரத்தை அடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.

படகிலிருந்து தான் கடலில் பாய்ந்ததாகவும், அப்படகில் மேலும் 24 பேர் இருந்தனர் என நோர் ஹொஸைன் கூறினார் எனவும் மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோதிலும், உயிர்த்தப்பியவர்களோ, சடலங்களோ கண்டுபிடிக்கப்படவில்லை என மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts