அங்கீகரிக்கப்படாத மோட்டார் பந்தயம் பொலிசாரால் இடைநிறுத்தம்!

பிலியந்தலை கெஸ்பாவே பகுதியில் நடைபெறவிருந்த ஒரு மோட்டார் பந்தயம் பின்னர் பொலிசாரின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத ஒரு மோட்டார் பந்தயமே இதற்குக் காரணமாக அமைகின்றது.

முகநூலில் நண்பர்கள் வட்டாரம் மூலம் தொர்புகளை ஏற்படுத்தி இவ் ஏற்பாட்டுக் குழுவினர் பந்தயத்தை தயார்படுத்தியதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்தது.

39 பேர் கைதுசெய்யப்பட்டனர் மற்றும் 27 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.

Related posts