ஹிங்குரான சீனித் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

கல் ஓயா பெருந்தோட்டக் கொம்பனியின் நிர்வாகத்தின் கீழ் ஹிங்குறான சீனித் தொழிற்சாலை சீனி உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.

1,100 பேர் பணியாற்றும் இந்நிறுவனத்தின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.

ஆளுநர் அனுராதா யகம்பத், ஹிங்குறான சீனித் தொழிற்சாலையின் செயற்பாட்டையும், அதன் உற்பத்தியையும் அதிகாரிகள் சகிதம் பார்வையிட்டார் . அதன் பின் ஊடக வியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1951 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினால் இத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.

இதனை ஸ்கொட்லாந்து அரசு பிரதமருக்கு நல்லெண்ண நிமித்தம் ஒரு பரிசாகவே வழங்கியிருந்தது. தற்போதைய நிலையில் இன்னும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் இத்தொழிற்சாலையை நம்பி சுமார் 6,700 ஹெக்ரேயர் நிலத்தில் கரும்பு செய்கை பண்ணப்படுகிறது. காலப் போக்கில், அதனை இன்னும் அதிகரிக்க இடமுண்டு.

Related posts