மன்னாரில் பேரூந்து நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மக்களின் பாவனைக்காக  உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால்  கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பஸ் நிலையத்தில் அரச தனியார் போரூந்து சேவைகள் வைபவ ரீதியாக இடம் பெறும் வகையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் அவர்களினால் உத்தியோக பூர்வாமாக கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தனியார் போரூந்து சங்கத்தின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட போதும் அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பிரதி நிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

குறித்த பேரூந்து நிலையத்தில் தனியார் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts