பொலிகை கரையோர அபிவிருத்தி சங்கத்தால் நிதி கையளிப்பு

பொலிகை கரையோர அபிவிருத்திச் சங்கத்தின் மூன்றாவது செயற்பாடாக முன்பள்ளிச்சிறார்களின் இடைவிடாத கல்விச்செயற்பாட்டிற்காக புலம்பெயர் வாழ் பொலிகை கரையோர அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள் மற்றும் பொலிகை கரையோர அபிவிருத்திச்சங்க நிர்வாக சபையினர் ஆகியோரின் பங்களிப்பில் ரூபா 112900.00 இன்றையதினம் பொலிகண்டி கிழக்கு கிராம உத்தியோகத்தர் முன்னிலையில் மக்கள் படிப்பக நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இன்றைய தினம் பொலிகை கரையோர அபிவிருத்தி சங்கத்தால் வழங்கப்பட்ட நிதியுடன் மக்கள் படிப்பகத்துக்கான நிதி 40 இலட்சம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெருந்தொகை நிதி நிரந்தர வைப்பு நிதியாக வைப்பிலிடப்பட்டுள்ளது. மிகுதி இரண்டாம் கட்ட நிதி சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிகை கரையோர அபிவிருத்தி சங்கத்தால் வழங்கப்பட்ட நிதியுடன் சேர்த்து அந்த நிதி ஒருசில தினங்களில் நிரந்தர வைப்பு நிதியாக வைப்பிலிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts