இன்று கொழும்பில் 9 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்றும் நாளையும்  9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (25) இரவு 8 மணி முதல் நாளை (26) அதிகாலை 5 மணி வரையும் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts