குற்றச்செயல்களுடன்  தொடர்புடைய இருவர் கைது!

குற்றச்செயல்களுடன்  தொடர்புடைய “வெல்லே சாரங்க“ என்ற நபருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய இருவர்  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் உள்ள மீன் சந்தைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் கைதுசெய்யப்படும் போது அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைபொருள் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts