இன்று 52 பயணிகள் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட குறித்த சில பயணிகள் மற்றும் விமானங்கள் நாட்டுக்கு திரும்பிவர அனுதிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டுத்தூதுவர்கள், இராணுவத்தினர் மற்றும் கடற்படைவீரர்களும் அடங்குவர்.

இன்று நான்கு தனித்தனி விமானங்களில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாயில் இருந்து 04 பயணிகளும், கட்டாரிலிருந்து 14 பயணிகளும், சென்னையில் இருந்து 21 பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 13 பேருமாக மொத்தமாக 52 பயணிகளும் இன்று காலை வருகை தந்தனர்.

அவர்கள் இராணுவத்தினர் மூலம் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts