முன்னாள் ஜனாதிபதி காலமானார்!

தன்சானியாவின் முன்னாள் ஜனாதிபதி பெஞ்சமின் மிகாபா (Benjamin Mkapa), வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானதாக தற்போதைய ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

81 வயதான மிகாபா 1995 – 2005 வரையான காலப் பகுதியில் தன்சானியாவின் ஜனாதிபதியாகவிருந்தார்.

பல பிராந்திய சமாதான மத்தியஸ்த முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய கிழக்கு ஆபிரிக்க நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியான மிகாபா, டார் எஸ் சலாமில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் மகுஃபுலி கூறினார்.

“தேசத்தின் மீதான அவரது மிகுந்த அன்பு, அவரது பக்தி, கடின உழைப்பு மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் நான் அவரை நினைவில் கொள்வேன் என்றும் மகுஃபுலி  கூறினார்.

அவரது உயிரிழப்புக்காக தன்சானியாவில் ஏழு நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்க அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து கொடிகளையும் அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கடினமான நேரத்தில் அனைத்து டான்சானியர்களையும் அமைதியாகவும், பொறுமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்குமாறும் ஜனாதிபதி மகுஃபுலி வலியுறுத்தியுள்ளதாக அவரது அலுவலகத்திலிருந்து வெளியான அறிக்கையில் சுடடிக்காட்டப்பட்டுள்ளது.

மிகாபா, ஆளும் சி.சி.எம். கட்சியின் தூதர், அமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts