தபால் மூல வாக்களிப்பிற்கான மேலதிக நாள் இன்று!

தபால் மூலம் வாக்களிப்பதற்கு தவறிய அரச ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றும் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணிவரையிலும், நாளை சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரையிலும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் தமது மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் தமது வாக்குகளை பதிவுசெய்யலாம்.

 

Related posts